சாம்பியன்ஸ் ட்ராஃபி: இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டனாக சுனிதா லக்ரா

  Newstm Desk   | Last Modified : 02 May, 2018 06:29 pm


இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு சுனிதா லக்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

தென் கொரியாவின் டாங்கே நகரத்தில் வரும் 13ம் தேதி ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான பெண்கள் ஹாக்கி போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஒடிசாவை சேர்ந்த சுனிதா லக்ரா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் அணியின் கேப்டனாக இருந்த ராணி ராம்பாலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை அடுத்து, லக்ராவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கக்கப்பட்டு உள்ளது. கோல் கீப்பர் சவிதா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 12 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு சென்றது. அந்த ஆட்டத்தில் நான்காவது இடத்தை இந்திய அணி பிடித்தது. இதனால் இந்திய அணி நம்பிக்கையுடன் ஆசிய போட்டியில் களமிறங்குகிறது. 

2016ம் ஆண்டு இந்திய அணி, இறுதிச் சுற்றில் சீனாவை வீழ்த்தியது. 2017 வருடத்திற்கான போட்டியிலும் இந்தியா, சீனாவை தொடர்ந்து இரண்டாவது முறையாக தோற்கடித்தது. 

இந்த வருடம் துவக்க போட்டியில் இந்தியா, 13ம் தேதி  ஜப்பான் அணியை சந்திக்கிறது.

இந்திய அணி விவரம்:-

கோல் கீப்பர்கள்: சவிதா, ஸ்வாதி. Savita, Swati.

தடுப்பாட்டக்காரர்கள்: தீபிகா, சுனிதா லக்ரா (கேப்டன்), தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், சுமன் தேவி தோடம். 

நடுகள வீராங்கனைகள்: மோனிகா, நமிதா டோப்போ, நிக்கி பிரதான், நேஹா கோயல், லிலிமா மின்ஸ், நவ்ஜோத் கவுர், உதித்தா.

முன்கள வீராங்கனைகள்: வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவநீத் கவுர், அனுப்பா பர்ளா. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close