மும்பை அணி வீரர்களுக்கு வினோத தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2018 07:55 pm

தினமும் ஜிம்முக்கு வராத மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு வினோத தண்டனை அளித்துள்ளது அணி நிர்வாகம். 

மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள வீரர்கள் சிலர் தினமும் ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்ய தவறுவிடுகின்றனர். அவர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தண்டனை தர முடிவு செய்துள்ளது.   

ஜிம்முக்கு வராதவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் இமோஜி கிட் எனப்படும் உடையை அணிய வேண்டும். அந்த உடையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் உருவங்கள் இமோஜி வடிவில் பதிக்கப்பட்டு இருக்கும். 

இந்த தண்டனையை முதல் முதலாக தற்போது பெற்றிருப்பவர்கள் இஷான் கிஷன், அனுகுல் ராய் மற்றும் ராகுல் சாஹர். அவர்கள் அந்த உடையை அணிந்துள்ள வீடியோவை மும்பை அணி நிர்வாகம் இணையத்தில் வெளியிட்டு உள்ளது. 

அந்த வீடியோவை பார்க்க: இங்கு க்ளிக் செய்யவும்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close