இங்கிலாந்து லெஜெண்ட் ஜோனதன் ட்ராட் ஓய்வு பெறுகிறார்

  Newstm Desk   | Last Modified : 04 May, 2018 11:47 am


இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் ஜோனதன் ட்ராட் ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவரான ட்ராட், இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். இங்கிலாந்து அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 2009, 2010/11 மற்றும் 2013 ஆண்டு ஆஷஸ் தொடரின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர். 2003ம் ஆண்டு வார்விக்ஷிர் கிளப் அணிக்காக முதல் முறையாக களம் இறங்கினார். முதல்தர போட்டியில் 44 சதங்களுடன் 17,750 ரன்கள் அடித்துள்ளார்.

சர்வதேச போட்டியில் இருந்து 2015ல் ஓய்வு பெற்ற ட்ராட், 2013ல் நடந்த ஆஷஸ் தொடரின் போது பாதிலேயே மன அழுத்தம் தொடர்பான நோய் காரணமாக விலகினார். 2009 ஆஷஸ் போட்டியில் அவர் அடித்த சதம், அணியை வெற்றி பெற வைத்தது. டெஸ்டில் 9 சதங்கள் அடித்திருக்கிறார். டெஸ்டில் 3,835 ரன், ஒருநாள் போட்டியில் 2,819 ரன்கள் எடுத்துள்ளார்.

தற்போது கவுன்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வரும் ட்ராட், இந்த சீசனுடன் ஓய்வு பெற இருப்பதாக வார்விக்ஷிர் கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close