ஆப்கானிஸ்தான் டெஸ்டுக்கு நோ?- கவுன்டியில் விளையாடுகிறார் விராட்!

  Newstm Desk   | Last Modified : 04 May, 2018 12:48 pm


கவுன்டி கிரிக்கெட் போட்டியில் முன்னணி அணியான சர்ரேவுக்காக விராட் கோலி விளையாட இருக்கிறார். 

ஐ.பி.எல் முடிந்த பிறகு இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஜூன் 14ம் தேதி தொடங்கி 18 வரை இப்போட்டி நடைபெறும். டெஸ்ட் அந்தஸ்து பெற்றதும் ஆப்கானிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த டெஸ்ட் போட்டிக்கு பின், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பங்கேற்க இருக்கிறது. 

மற்ற இடங்களில் அதிரடி காட்டும் இந்திய கேப்டன் விராட், இங்கிலாந்து மண்ணில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் அந்த மண்ணிலும் ஜொலிக்க, அங்கு நடக்கும் உள்ளூர் போட்டியான கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட விராட் திட்டமிட்டார். ஆனால், ஆப்கானிஸ்தான் இந்தியாவில் விளையாட இருக்கும் சரித்திரமிக்க டெஸ்ட் போட்டியில் விராட் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ விரும்பியது. 

இதனால் விராட் டெஸ்டில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுன்டி போட்டியில் சர்ரே அணிக்காக விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விராட்டின் ஒப்பந்தத்தை சர்ரே ட்விட்டரில் உறுதி செய்தது. ஜூன் 9ம் தேதி முதல் 12ந் தேதி வரை சர்ரேவுக்காக விளையாடும் விராட், 13ம் தேதி பெங்களூருவுக்கு வருவார் என்று தெரிகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close