ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: கோலியை தொடர்ந்து 8 முன்னணி வீரர்கள் புறக்கணிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 May, 2018 01:14 pm


விராட் கோலியை தொடர்ந்து முன்னணி வீரர்களான 8 பேர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். 

ஐ.பி.எல் போட்டிக்கு பின் இந்திய அணி, ஜூன் 14ம் தேதி பெங்களூருவில் தொடங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. டெஸ்ட் அந்தஸ்து பெற்று, ஆப்கானிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி என்பதால், பிசிசிஐ இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியை தானே நடத்துவது என்று முடிவு செய்தது. இந்த டெஸ்ட் போட்டிக்கு பின், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பங்கேற்க இருக்கிறது. 

இங்கிலாந்து டெஸ்டில் தனது முழு கவனத்தை செலுத்த, கேப்டன் விராட் கோலி ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல், இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தார். இந்த நிலையில், கோலியை அடுத்து 8 முன்னணி வீரர்களும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜின்க்யா ரஹானே, புஜாரா, முரளி விஜய், ஷிகர் தவான், அஷ்வின், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் ஆப்கானிஸ்தான் டெஸ்டை புறக்கணிக்க உள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

புஜாரா, இஷாந்த் ஆகிய இருவரும் ஏற்கனவே கவுன்டியில் விளையாடி வருகின்றனர். இதனிடையே, கோலி மற்றும் அஷ்வின் கவுன்டி போட்டியில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close