அடுத்தடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது டெல்லி அணி

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 08:45 am

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் நேற்றைய தோல்வியை அடுத்து அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. 

ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் போட்டியில், டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர்

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

ஹைதராபாத் அணி 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 32 ரன்களுடனும், யூசுப் பதான் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த தோல்வியின் காரணத்தால் டெல்லி அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது. தற்போது 10 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி 3 ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.  இருந்தும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து ரன் ரேட் அடிப்படையில் இந்த அணி பிளேஆஃப்க்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close