ஐபிஎல்: தடம் பதித்த மும்பை! கோட்டைவிட்ட கொல்கத்தா!!

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 08:06 pm


கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றது 

ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதின. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரோகித் சர்மா 11 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 59 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காத ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 35 ரன்களை விலாசினார். இதையடுத்து மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்து, 182 ரன்களை கொல்கத்தா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 168 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது. மும்பை அணிக்கு இது  4 வது வெற்றியாகும். 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close