ஐ.பி.எல்-ல் 4000 ரன் மைல்கல்லை எட்டினார் ராபின் உத்தப்பா

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 12:17 pm


ஐ.பி.எல்-ல் நான்காயிரம் ரன்களை கடந்த, ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் ராபின் உத்தப்பா. 

2018 சீசனுக்கான ஐ.பி.எல் போட்டியில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், மும்பை எதிராக ஆடிய கொல்கத்தாவின் ராபின் உத்தப்பா, 35 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். இதன் மூலம், ஐ.பி.எல்-ல் 4,000 ரன்களை அவர் கடந்தார். 

153 போட்டிகளில் 4,037 ரன்கள் அடித்திருக்கும் உத்தப்பா, நான்காயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டும் ஆறாவது வீரராவார். சுரேஷ் ரெய்னா (4,801 ரன், 140 போட்டி), விராட் கோலி (4,775 ரன், 128 போட்டி), ரோஹித் சர்மா (4,438 ரன், 147 போட்டி), கவுதம் கம்பிர் (4,217 ரன், 140 போட்டி) மற்றும் டேவிட் வார்னர் (4,014 ரன், 114 போட்டி) இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐந்து வீரர்களாவார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, இதுவரை 3921 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, பஞ்சாபின் தூண் கிறிஸ் கெய்ல், 3936 ரன் அடித்துள்ளார். இருவரும் இந்த சீசனிலேயே நான்காயிரம் இலக்கை ஏற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close