பகல்-இரவு போட்டியில் விளையாட முடியாது- பிசிசிஐ திட்டவட்டம்

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 02:14 pm


ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி, பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்காது என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று டி20, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6-10ல் நடக்கிறது. இது பிங்க்-பால் டெஸ்ட் போட்டியாக நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்புகிறது. ஆனால், பிசிசிஐ இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது பகல்-இரவு ஆட்டத்துக்கு திட்டவட்டமாக முடியாது என்று கூறியுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா பிங்க்-பால் போட்டியில் விளையாட, சுற்றுப்பயணம் செய்யும் அணிகளிடம் வறுபுறுத்தி வருகிறது. ஆனால், தங்களது கலாச்சார சிவப்பு-பந்து போட்டியில் இருந்து மாற முடியாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

பிசிசிஐ-ன் நிர்வாக குழுவுடன், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேச்சுவார்த்தை நடத்தியதில், பகல்-இரவு போட்டிக்கு தயாராக இந்திய அணிக்கு 18 மாதங்களாவது ஆகும் என்று கூறியுள்ளார். இதனை பிசிசிஐ செயல் அதிகாரி சவுத்ரி, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லாண்டிடம் கூறினார். 

இந்திய வீரர்களில் புஜாரா, முரளி விஜய் ஆகியோர் துலீப் ட்ராஃபி போட்டியின் போது, பகல்-இரவு ஆட்டங்களில் அடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close