ஆஸி. அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக டிம் பெய்ன் தேர்வு

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 11:25 am

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக டிம் பெயனும், டி20 தொடரின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச்-ம் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சிக்கிய பின் அந்த அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் அணியில் இருந்து நீக்கப்பட்னடர். இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக டிம் பெய்ன் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் அந்த அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு எதிரான ஓருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் முத்தரப்பு தொடர்களில் விளையாடுகிறது. 

இந்த போட்டிகளுக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக டிம் பெய்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த அணியின் 25வது கேப்டனாவார்.

மேலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ன் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தற்காலிகமான ஒன்று தான் எனவும், விரைவில் ஒருநாள் போட்டிகளுக்கான நிரந்தர கேப்டன் நியமிக்கப்படுவார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close