ஆறு தொடர்களுக்கான இந்திய அணிகள்; முழு விவரம்!

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 11:38 am


இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு, ஆறு தொடர்களுக்கான புதிய இந்திய அணிகளை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. 

தேசிய தேர்வுக்குழு கூட்டம் நேற்று (மே 8) பெங்களூருவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 'ஏ' அணி, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீசுடன் முத்தரப்பு தொடரில் பங்கேற்கும் இந்தியா 'ஏ' அணி, அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய டி20 அணி, இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய டி20 அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆகிய ஆறு வெவ்வேறு தொடர்களுக்கான இந்திய அணிகளை தேர்வுக்குழு தேர்வு செய்தது. 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்ட்டார். இதனால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரஹானே நீக்கப்பட்டார். 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில், ஐ.பி.எல்-ல் அசத்தி வரும் கே.எல். ராகுல், சித்தார்த் கவுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 2016ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் அணியில் அம்பதி ராயுடு விளையாட உள்ளார். இது தவிர, முத்தரப்பு தொடருக்கான இந்திய ஏ அணியும், நான்கு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணியும் தேர்வு செய்யப்பட்டது.


இந்திய அணிகளின் விவரம் வருமாறு:-

இந்திய டெஸ்ட் அணி: அஜின்க்யா ரஹானே (கேப்டன்), சேடேஸ்வர் புஜாரா, ஷிகர் தவான், முரளி விஜய், கே.எல். ராகுல், கருண் நாயர், வ்ரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாகூர்.

இந்திய ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ். 

இந்திய டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், சாஹல்,குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

முத்தரப்பு தொடருக்கான இந்திய ஏ அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஷப்மன் கில், ஹனுமா விஹாரி, சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரிஷாப் பந்த், விஜய் ஷங்கர், கவுதம், அக்சர் படேல், க்ருனால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா, தீபக் சாஹர், கலீல் அஹ்மத், ஷர்துல் தாகூர்.

நான்கு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி: கருண் நாயர் (கேப்டன்), சமர்த், மயங்க் அகர்வால், அபிமன்யு ஈஸ்வரன், ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி, அங்கித் பவ்னே, விஜய் ஷங்கர், பரத், ஜெயந்த் யாதவ், ஷாபஸ் நதீம், அங்கித் ராஜ்பூத், முகமது சிராஜ், நவ்தீப், ராஜ்நேஷ் குர்பானி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close