ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் மிகப்பெரிய மாற்றம்

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 05:42 pm


ஐ.பி.எல் தொடரில் நடைபெற இருக்கும் பிளே-ஆஃப் மற்றும் இறுதிச் சுற்றுக்கான நேரத்தை மாற்றி அமைத்தது குறித்து ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் ஷுக்லா பேட்டி அளித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகள் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டன. யார் உள்ளே, யார் வெளியே என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு நாள் போட்டியும் ஸ்டேடியத்தில் நேரடியாகவும், தொலைக்காட்சிகளில் நேரலையாகவும், மொபைல் போனில் லைவாகவும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டிகள் முடிவடைய இரவு 11.30 - 12 மணி ஆகிவிடுகிறது. இதனால், மறுநாள் காலையில் எழுந்து அலுவலகம் செல்வது உள்ளிட்ட விஷயங்கள் பாதிக்கப்படுவதாக ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர். ஆனால், இதைப் பற்றி எல்லாம் ஐ.பி.எல் நிர்வாகம் கவனத்தில்கொள்ளுமா என்ன...

இரவு நீண்ட நேரம் ஆவதால் விளம்பர வசூல் குறைவதாக கூறப்படுகிறது. இதனால் போட்டி தொடங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து கோரிக்கை வந்தது. ஆனால் இதை முதலில் ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்கவில்லை. தற்போது, இறுதிப் போட்டி நேரம் மாற்றப்படுவதாக ராஜீவ் ஷுக்லா அறிவித்துள்ளார். இரவு 8 மணிக்கு பதில் 7 மணிக்கே பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகள் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம், போட்டியை காணும் ரசிகர்கள் மறுநாள் காலை அவர்களது வேலையில் நிம்மதியாக கவனம் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.  

மே 22ந் தேதி மும்பையின் வான்கடே மைதானத்தில் முதல் தகுதிச் சுற்று போட்டி நடக்கிறது. மே 23ல் எலிமினேட்டர் மற்றும் மே 25ம் தேதி இரண்டாவது தகுதிச் சுற்று போட்டிகள் கொல்கத்தாவிலும், மே 27ம் தேதி இறுதிச் சுற்று போட்டி மும்பையிலும் நடக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close