ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டன்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 05:57 pm


சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டன் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர்கள் முன்னேறியுள்ளனர். 

ஆஸ்திரேலியா ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு துவக்க போட்டியில், இந்திய வீரர் சாய் பிரனீத் 21-17 21-14 என்ற நேர்செட் கணக்கில் இஸ்ரேலின் மிஷா சில்பெர்மனை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் பிரனீத், இந்தோனேசியாவின் பஞ்சி அகமதுவுடன் மோதுகிறார்.

மற்றொரு போட்டியில், சமீர் வர்மா 13-21 21-17 21-12 என நியூசிலாந்தின் அபினவ் மனோதாவை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் சமீர், தனது சகோதரர் சௌரப் வர்மாவை துவக்க போட்டியில் தோற்கடித்த ஜப்பானின் தகுமாவை எதிர்கொள்கிறார். ஆண்கள் பிரிவில், அஜய் ஜெய்ராம், கரண் ராஜன் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

பெண்கள் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை. அப்பிரிவில் இடம் பெற்ற ஒரே ஒரு இந்திய வீராங்கனையான வைஷ்ணவி ரெட்டி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம் கண்டார். 

ஆண்கள் இரட்டையர் பிரிவில், மனு அத்ரி- சுமித் ரெட்டி மற்றும் அர்ஜுன்- ராமசந்திரன் இணைகளும், துவக்க ஆட்டத்தில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். பெண்கள் இரட்டையர் பிரிவில், மோகனா- பூர்விஷா ஜோடியும் இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close