ஐ.எஸ்.எல்: பிளே ஆப் சுற்றை நெருங்கியது சென்னையின் எஃப்.சி!

  SRK   | Last Modified : 23 Feb, 2018 10:25 pm


 இன்று கேரளாவில் நடந்த ஐ.எஸ்.எல்  கால்பந்து போட்டியில், கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியுடன், சென்னையின் எஃப்.சி மோதியது. இரு அணிகளும்  பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற, இந்த போட்டி முக்கியமானதாக கருதப்பட்டது.

முதல் பாதியில் கேரளா அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், கோல் அடிக்க முடியவில்லை.  முதல் பாதியிலேயே மிகவும் சிறப்பான கோல் வாய்ப்பு சென்னை அணிக்கு கிடைத்தது. ஆனால், அதை நட்சத்திர வீரர் ஜேஜே வீணாக்கினார். முதல் பாதி கோல் இல்லாமல் முடிந்தது.

அதன்பின், இரண்டாவது பாதியில் இரு அணிகளும் பலப்பரீட்சை செய்தன. சென்னை அணி செய்த ஒரு பவுலால், கேரளாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கேரளாவின் பெகுசன் அடிக்க, சென்னை அணியின் கோல் கீப்பர் கரன்ஜீத் சிங் தடுத்தார். போட்டி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. 

17 போட்டிகள் விளையாடியுள்ள சென்னை அணி, தற்போது 29 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் மும்பை அணியுடன் சென்னை மோதுகிறது. சென்னை அணி ஏறத்தாழ பிளே ஆப் சுற்றுக்கு தேர்வாகிவிட்ட, நிலையில், அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் அது உறுதி செய்யப்படும். 25 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ள, கேரளா அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது மிக கடினம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close