டி20 தரவரிசை பட்டியலில் எகிறிய புவனேஸ்வர், தவான்!

  SRK   | Last Modified : 25 Feb, 2018 09:00 pm


இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், டி20-க்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில், 20 இடங்கள் முன்னேறினார். 

அதேநேரம் இந்திய கேப்டன் விராட் கோலி 3 இடங்கள் கீழே இறங்கி 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், தென் ஆப்பிரிக்காவை 2-1 என வீழ்த்தி அசத்தியது இந்திய அணி. புவனேஷ்வர் குமார் 7 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதைத் தொடர்ந்து, 20 இடங்கள் முன்னேறி 12வது இடத்தை புவனேஷ்வர் பிடித்துள்ளார். 

இதற்கு முன் 4வது இடத்தில் இருந்த ஐஸ்ப்ரீத் பும்ரா, ஒரு இடம் இறங்கி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானும், இரண்டாவது இடத்தில் நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஐஷ் சோதியும் உள்ளனர். 

இந்திய கேப்டன் கோலி 2 போட்டிகள் மட்டுமே விளையாடிய நிலையில், வெறும் 27 ரன்கள் அடித்திருந்தார். அதனால் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 6வது இடத்திற்கு கோலி தள்ளப்பட்டார். சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் ஷிக்கர் தவான், 14 இடங்கள் முன்னேறி 28 வது இடத்தை பிடித்தார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close