ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்; நவ்ஜாத் கவுர் சாதனை

  SRK   | Last Modified : 03 Mar, 2018 02:32 pm


நேற்று நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை நவ்ஜாத் கவுர் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை, என்ற சாதனையை கவுர் படைத்துள்ளார். 

65 கிலோ எடைப்பிரிவில், இறுதிப் போட்டியில் ஜப்பான் நாட்டின் மியா இமாயுடன் மோதிய கவுர், 9-1 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், 62 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். கஜகஸ்தான் நாட்டின் வீராங்கனை அயவ்லிம் காசிமோவாவுடன் நடந்த 3வது இடத்திற்கான போட்டியில், மாலிக் 10-7 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி வென்றார். 

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா தற்போது ஒரு தங்கம், ஒரு வெள்ளி 4 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close