உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவின் மனு தங்கம் வென்றார்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 05 Mar, 2018 09:24 am

மெக்சிகோவில் நடந்துவரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் பிரிவில் 16 வயதான இந்தியாவின் மனு பேகர் தங்கப் பதக்கம் வென்றார்.

இன்டர்நேஷனல் ஷூட்டிங் ஸ்போர்ட் ஃபெடரேஷன் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவில் நடந்து வருகிறது. இதில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பேகருக்கும், இரண்டு முறை உலக கோப்பை தங்கப்பதக்கம் வென்றவரும் மெக்சிகோவைச் சேர்ந்தவருமான அலெஜந்திரா சவலாவுக்கும் இடையே கடும் போட்டி நீடித்தது. இறுதியில், மனு தங்கப்பதக்கம் வென்றார். 

மெக்சிகோவின் அலெஜந்திரா 237.1 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். பிரான்சின் செலின் கோபர்வில்லி 217 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். மனு பேகரின் டீம்மேட்டான, இந்தியாவின் யாசஷ்வினி சிங் 196.1 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.

தற்போதைய அளவில், இந்தியா இரண்டு தங்கப்பதக்கம், மூன்று வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close