தோனி தான் சிறந்த ஃபினிஷர் - அடித்துச் சொல்லும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 05 Mar, 2018 10:17 am

கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த ஃபினிஷர் தோனிதான் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். கிரிக்கெட் நேரடி வர்ணனை, நேரடி கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் கிரிக்கெட் பற்றிய அலசல் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இப்படி ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதன் மூலம் அவரது மவுசு கிரிக்கெட் உலகில் அதிகரித்துள்ளது. எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு வாகன் உடனுக்குடன் பதில் அளித்துவிடுகிறார்.


சமீபத்தில் ட்விட்டரில் #AskVaughan என்று கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது. ஆஸ்திரேலியாவின் சிறந்த ஃபினிஷனர் என்று கொண்டாடப்படும் மைக்கேல் பீவன் அல்லது இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி... இந்த இரண்டு பேரில் யாரை மிகச்சிறந்த ஃபினிஷர் என்று சொல்வீர்கள்... உங்கள் கனவு அணியில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு உடனடியாக வாகன் பதில் அளித்தார். யோசிக்கவே வேண்டாம் நிச்சயம் தோனிதான் என்று அவர் பதில் அளித்தார். மாலை 3.40-க்கு கேட்கப்பட்ட கேள்விக்கு, 4.06-க்கு எல்லாம் மைக்கேல் வாகன் பதில் அளித்திருந்தார். வாகனில் பதிவு தற்போது இந்தியாவில், தோனி ரசிகர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close