ஷமியின் மனைவியிடம் பிசிசிஐ அதிகாரிகள் விசாரணை

  SRK   | Last Modified : 18 Mar, 2018 01:12 pm


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி மீது சில தினங்களுக்கு முன்பு, அவரது மனைவி ஹசின் ஜஹான், சூதாட்டம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் ஜஹானிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

சில தினங்களுக்கு முன், திடீரென சமூக வலைதளங்களில், ஷமி மீது பல குற்றச்சாட்டுகளை அவரது மனைவி ஜஹான் முன்வைத்தார். ஷமி பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், ஷமி மற்றும் அவரது குடும்பத்தார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்தார். 

மேலும், கிரிக்கெட் சூத்தட்டம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஷமி ஈடுபட்டுள்ளதாகவும் அவர்  குற்றம் சாட்டினார். அந்த சமயம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள காண்ட்ராக்ட் கொடுத்து வந்த பிசிசிஐ, ஷமியின் காண்ட்ராக்ட்டை தற்காலிகமாக ஒத்திவைத்தது. இதுகுறித்து விசாரித்து வருவதாக பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில், பிசிசிஐ-யின் லஞ்ச ஒழிப்பு பிரிவு, ஷமியின் மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளது. 

இதை ஜஹானின் வழக்கறிஞர் உறுதி செய்தார். பல மணி நேரம் அதிகாரிகள் ஜஹானிடம் கேள்வி கேட்டதாக அவர் தெரிவித்தார். ஷமிக்கு எதிரான சில ஆதாரங்களை அவர் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close