உயிரை பணயம் வைத்த செல்ஃபி புள்ள தோனி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 19 Mar, 2018 07:12 pm


ரசிகர்களுக்காக உயிரை பணயம் வைத்து தோனி செல்பி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஃபேன்ஸ் பட்டாளம் ஏராளம். தோனியுடன் ஒரு செல்ஃபி எடுப்பதை பலர் வாழ்நாள் சாதனையாகவே வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று தோனி, மும்பையில் உள்ள மாலுக்கு சென்றுள்ளார். தோனி வந்திருக்கும் தகவல் வெளியானதும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் அந்த மால் முன்பு திரண்டனர். பலரும், அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என்று வெளியே காத்துக்கொண்டிருந்தனர்.

அவ்வளவு பேருடன் போட்டோ எடுப்பது சாத்தியமில்லை. இதனால், கடையின், பில்லர் மீது ஏறிய தோனி, கண்ணாடி வழியாக ரசிகர்களைப் பார்த்தபடி செல்ஃபி எடுத்தார். மிகவும் ஆபத்தான சுவர் ஒன்றின் மீது ஏறி தோனி செல்ஃபி எடுத்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலரும் தோனியைப் பாராட்ட, சில ரசிகர்களோ இனி இப்படிப்பட்ட ஆபத்தான காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று செல்லமாக கோபித்துக்கொண்டனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close