ரபாடா மீதான தடையை நீக்கியது ஐசிசி

  நந்தினி   | Last Modified : 20 Mar, 2018 05:27 pm


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடாவுக்கு அனுமதி வழங்கியது ஐசிசி.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 22ந் தேதி தொடங்குகிறது. 

கடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் ரபாடாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமும், 3 டெமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டது. இதன் காரணமாக, இரண்டு போட்டிகளில் விளையாட ரபாடாவுக்கு தடை விதிக்கப்பட்டது. 

இந்த தடையை எதிர்த்து ரபாடா மேல்முறையீடு செய்திருந்தார். அதன் மீதான விசாரணையில் இன்று ஐசிசி, ரபாடா மீதான 50 சதவீத அபராதத்தை 25 சதவீதமாகவும், 3 டெமெரிட் புள்ளிகளை ஒரு டெமெரிட் புள்ளியாகவும் குறைத்தது. இதனால், நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்க இருக்கும் போட்டியில், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரபாடா பங்கேற்பார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close