அம்பேத்கரை இழிவு படுத்தியதாக ஹர்திக் பாண்ட்யா மீது வழக்கு

  ஐஸ்வர்யா   | Last Modified : 22 Mar, 2018 09:33 am


இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யா. இவர் கடந்தாண்டு டிசம்பர் 26ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இடஒதுக்கீடு என்ற நோயை இந்தியாவில் பரப்பியவர் அம்பேத்கர் என கூறியிருந்தார். இந்த பதிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து பாண்ட்யா நீக்கிவிட்டார்.

இதையடுத்து ஹர்திக் பாண்ட்யாவின் கருத்து அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையிலும் அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறி டி.ஆர்.மேவால் என்பவர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், ஹர்திக் பாண்ட்யா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close