காமன்வெல்த் துவக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் பி.வி. சிந்து

  நந்தினி   | Last Modified : 24 Mar, 2018 04:37 pm


ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில், 21-வது காமன்வெல்த் போட்டிகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இப்போட்டியில், 14 விளையாட்டுகளில் 219 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

காமன்வெல்த் போட்டியின் துவக்க விழாவின் போது, ஒவ்வொரு நாட்டு வீரர்- வீராங்கனைகளின் அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்தியா சார்பில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து தேசிய கொடியை ஏந்திச் செல்ல இருக்கிறார். அவர் பின்னால் இந்திய வீரர்- வீராங்கனைகள் அணிவகுத்து செல்வார்கள். 

நேற்று இந்தியன் ஒலிம்பிக் சங்க கூட்டத்தில், தேசிய கொடியை ஏந்திச் செல்ல, பி.வி. சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close