கால்பந்து தாக்கி மைதானத்திலேயே மரணமடைந்த குரோஷியா வீரர்

  SRK   | Last Modified : 27 Mar, 2018 12:13 pm


குரோஷியா நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர், இரு தினங்களுக்கு முன் நடந்த போட்டியின்போது, பந்து தாக்கியதால் இதய செயலிழப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே உயிரிழந்தார்.

குரோஷியா நாட்டின் 3வது தர லீக் அணியான என்.கே மார்சோனியாவில் விளையாடி வருபவர் புருனோ போபன். 25 வயதேயான இவர், லீக் போட்டிகளில் அதிகபட்ச கோல்கள் அடித்த பெருமைக்கு ஆளானவர். கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில், விளையாடியபோது, வேகமாக வந்த பந்து போபனின் நெஞ்சில் பட்டது. பந்து தாக்கிய சிறிது வினாடிகள் மெதுவாக ஓடிய அவர், திடீரென கீழே விழுந்தார்.

பேச்சுமூச்சின்றி கிடந்த அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த வீரர்களும், நடுவரும், உடனடியாக மைதானத்தில் காத்திருந்த அவசர மருத்துவ சேவையை அழைத்தனர். அவர்கள் விரைந்து வந்து போபனுக்கு முதலுதவி செய்தனர். ஆனால், மைதானத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. பின்னர் பிரேத பரிசோதனை செய்தபோது, இதய செயலிழப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக தெரிய வந்தது. இந்த சம்பவம் குரோஷியா நாட்டு கால்பந்து ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close