முத்தரப்பு டி20: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2018 05:30 pm


இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்திய அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், இந்திய அணி நாக்-அவுட்டாகி இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. தொடரில் இன்று நடந்த ஆறாவது போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 18.5 ஓவரில் 107 ரன்னில் இங்கிலாந்து அணி சுருண்டது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 15.4 ஓவரில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து தொடரில் ஒரு வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவின் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 62 ரன் எடுத்து இந்தியாவின் ஆறுதல் வெற்றிக்கு வழி வகுத்தார்.

வருகிற 31ந் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close