வேங்கை மவன் ஒத்தைல நிக்கேன்! - எம்.எஸ்.தோனியின் கலக்கல் டப்ஸ்மாஷ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Mar, 2018 08:33 pm


சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு காலா பட வசனத்தை டப்ஸ்மாஷ் செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

11வது ஐ.பி.எல் கிரிகெட் திருவிழா அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. இதனால் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதுகின்றன. இதனால் சென்னை அணி வீரர்கள் சென்னை வந்து சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சிக்கு இடையே விளம்பரங்களில் நடிப்பது, சென்னையை சுற்றிப்பார்ப்பது என மகிழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில், ரஜினியின் காலா பட வசனத்தை தோனி டப்ஸ்மாஷ் செய்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில், கியாரே செட்டிங்கா..? வேங்கையன் மவன் ஒத்தைல நிக்கேன்.. 'தில்'லிருந்தா மொத்தமா வாங்கலே... என நெல்லை தமிழில் ரஜினி பேசிய வசனம், மிகவும் வைரலானது. 

இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனியும் காலா பட வசனத்தை டப்ஸ்மாஷ் செய்துள்ளது போன்ற அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close