டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2018 12:35 pm


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. 

பாகிஸ்தான் மண்ணில் மூன்று டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்றிருந்தது. இதில் முதல் இரண்டு போட்டிகளையும் பாகிஸ்தான் வென்று 2-0 என தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 153 ரன் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான், 16.5 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், 3-0 என வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்து தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close