பிசிசிஐ மீடியா உரிமை: ரூ.6.381.1 கோடிக்கு வாங்கியது ஸ்டார்!

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2018 05:43 pm


பிசிசிஐ மீடியா உரிமையை ஏலத்தில் கடும் போருக்கு பிறகு ரூ.6.381.1 கோடி வழங்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் இருதரப்பு தொடர்களை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கவர் செய்யும் மீடியா உரிமையை பெற கடந்த மூன்று நாட்களாக ஏலப் போர் நடந்தது. இதில், ஸ்டார், ஜியோ, சோனி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இன்று ஏலத்தின் முடிவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா போரில் வென்றது. 

2018-2023 ஆண்டு வரையிலான இந்திய அணி போட்டிகளை ஸ்டார் குழுமம் வெளியீடும். முன்பு 2012-2018 வரைக்கான உரிமத்தை ஸ்டார் நிறுவனம் ரூ.3851 கோடிக்கு தான் பெற்றிருந்தது. 

ஜூன் 2018 முதல் மார்ச் 2023 வரை இந்திய அணி விளையாடும் 102 போட்டிகளை கவர் செய்யும் உரிமையை பெறுவதற்கான ஏலப் போட்டியில் ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்களும் போட்டியிட்டன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close