காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் தங்கம் வென்றார் சஞ்சிதா சனு

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2018 12:38 pm


ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 71 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் பங்கேற்றிருக்கின்றனர். 

இன்று இந்த போட்டியில் நடந்த பெண்களுக்கான பளுதூத்துதல் பிரிவில், இந்திய வீராங்கனை சஞ்சிதா சனு 53 கிலோ எடைப் பிரிவில், 192 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம், இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது. நேற்று மீராபாய் சனு பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். கடந்த ஆண்டு காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் சஞ்சிதா தங்கம் வென்றிருந்தார். 

பப்புவா நியூ கினியாவின் லோவா டிகா தோய இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், நியூசிலாந்தின் ரேச்சல் லேப்லன்க்- பஜினெட் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close