ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி

  நந்தினி   | Last Modified : 06 Apr, 2018 04:59 pm


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி இன்று நாக்பூரில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய பந்துவீச்சு வீராங்கனைகள் அபாரமாக பந்துவீச, 49.3 ஓவரில் 207 ரன்னில் இங்கிலாந்து அணி ஆல்-அவுட்டானது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 49.1 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 208 ரன் எடுத்தது. 

இதனால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close