காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு நான்காவது தங்கப்பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2018 04:46 pm


காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு நான்காவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார் வெங்கட் ராகுல் ரகலா. 

கோல்டுகோஸ்ட்டில் நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 85 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் வெங்கட் ராகுல் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மொத்தம் 338 கிலோ எடையை அவர் தூக்கினார். 85 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் வெங்கட் ராகுல் ஆவார். இதன் மூலம் இந்தியாவுக்கு நான்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மேலும், இந்தியாவின் பட்டியலில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கமும் உள்ளது. 

கடந்த வருடம் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெங்கட் வெள்ளி வென்றார். 2014ம் ஆண்டு சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். யூத் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இப்போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் வெங்கட். தவிர ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close