காமன்வெல்த்: 6 வது தங்கத்தை வென்றது இந்தியா!

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Apr, 2018 09:11 am


காமன்வெல்த் மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் மற்றும் துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். 

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்த புதன்கிழமை கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள காமன்வெல்த் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.


இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து துப்பாக்கி சுடுதலில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்  காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்தியா 6 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது குறிப்பிடதக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close