நீ கலக்கு பங்கு - ஹார்பஜனின் லேட்டஸ்ட் தமிழ் ட்வீட்

  கனிமொழி   | Last Modified : 08 Apr, 2018 04:13 pm


இரண்டு வருடம் தடை முடிந்து மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிய சி.எஸ்.கே நேற்றைய மேட்சை சுவாரஸ்மாகக் கொண்டுச் சென்று த்ரில் வெற்றி பெற்றது. அணியில் பழைய வீரர்கள் தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் மற்றும் பிராவோ உள்ளிட்டோர் இருக்க, புதிகாக சில வீரர்களும் சி.எஸ்.கே விற்காக களம் இறங்கியுள்ளனர். 

ஐ.பி.எல் ஆரம்பித்த 2008-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2017 - வரை சரியாக பத்து சீசன்களும் ஹர்பஜன் சிங் 'மும்பை இந்தியன்ஸ்'ஸுக்காக விளையாடினார். தற்போது முதன் முறையாக சென்னை அணியில் விளையாடுகிறார். இதனை மறைமுகமாக அறிவிக்க, ஐ.பி.எல் பேச்சு ஆரம்பமாவதற்கு சில மாதங்கள் முன்பே தனது ட்விட்டரில் தமிழில் பதிவிட்டிருந்தார். 

இப்போது முழுநேர தமிழனாகவே மாறிவிட்டார். வீட்டைப் பிடித்து குடும்பத்துடன் இங்கேயே செட்டில் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு தமிழில் அவர் போடும் ட்விட்டர் பதிவுகள் பிரபலமாகிவிட்டன, அதுவும் பூர்வீக சென்னைவாசியைப் போல். 


நேற்று சி.எஸ்.கே வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தவர் பிராவோ. அணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தந்ததோடு 'மேன் ஆஃப் த மேட்ச்' அவார்டும் வாங்கினார். அதனால் சென்னை ரசிகர்கள் பிராவோவை தூக்கி வைத்துக் கொண்டாட, ஹர்பஜனும் தனது ஸ்டைலில் பிராவோவை வாழ்த்தியிருக்கிறார். 

எப்படி தெரியுமா? தனது ட்விட்டர் பக்கத்தில், 'இது வேற மாதிரி ஆட்டம். வெறித்தனமான ஆட்டம். இது சும்மா ஆரம்பம் தான் மா @ChennaiIPL ன்னு சொன்னாலே பழைய ரெகார்டஸ்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுதா @DJBravo47 நீ கலக்கிட்ட பங்கு #DhillurundhaVaa' என சாட்சாத் சென்னைக்காரனாகவே மாறிவிட்டார். இதனை தற்போது சி.எஸ்.கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். 

ஒருவேளை இவருக்கு பெர்சனலா மும்பை மேல எதாச்சும் கோபம் இருக்குமோ...?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close