காமன்வெல்த்: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம், வெண்கலம் வென்ற இந்தியர்கள்!

Last Modified : 09 Apr, 2018 10:47 am


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில், 10மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், இந்திய வீரர் ஜீத்து ராய் தங்கமும், ஓம் மிதரவால் வெண்கலமும் வென்றனர். 

ஏற்கனவே, பெண்கள் துப்பாக்கிச் சுடுதலில், 10மீ ஏர் ரைபிள் போட்டியில், 16 வயதேயான இளம் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்று காமன்வெல்த் சாதனையை முறியடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று நடந்த ஆடவருக்கான துப்பாக்கிச் சுடுதலில், ஜீத்து ராய் மற்றும் ஓம் மிதரவால் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடினர். தகுதிச் சுற்று போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிய மிதரவால், காமன்வெல்த் போட்டிகளில் தகுதிச் சுற்று சாதனையை சமன் செய்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆனால், இறுதி சுற்றில் ஜீத்து ராய் முழு ஆதிக்கம் செலுத்த, ஓம் மிதர்வாலால் தனது முந்தைய ஃபார்மை தக்க வைக்க முடியவில்லை. 235.1 புள்ளிகள் பெற்று காமன்வெல்த் சாதனையை முறியடித்த ஜீத்து ராய், தங்கப் பதக்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி பெல் 233.5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற, மிதரவால் 214.3 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். 

முன்னதாக இளம் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 240.1 புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close