ஐ.பி.எல்: ஜாதவை தொடர்ந்து மும்பை வீரர் கம்மின்ஸ் விலகல்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2018 12:11 pm


ஐ.பி.எல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். 

11-வது ஐ.பி.எல் போட்டி தொடங்கி மூன்று நாட்களே ஆன நிலையில், எட்டாவது வீரராக தொடரை விட்டு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகுகிறார். இன்று இந்தியாவில் இருந்து அவர் நாடு திரும்புவார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. சுற்றுப்பயணத்திற்கு முன்பாக அவருக்கு அதிக ஓய்வு தேவைப்பட உள்ளதால், தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறார். 

பேட் கம்மின்ஸின் அடிப்படை தொகை ரூ.2 கோடி. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி அவர் ரூ.5.4 கோடி கொடுத்து வாங்கியது. கடந்த 7ம் தேதி சென்னை அணியுடனான முதல் போட்டியிலும் மும்பை அணியில் கம்மின்ஸ் இடம் பெறவில்லை. ஏற்கனவே மும்பை அணியில் இடம் பெற்றிருந்த மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரான்ட்ராஃப் காயம் காரணமாக விலாகினார். அவரை ரூ.1.5 கோடி கொடுத்து மும்பை வாங்கியிருந்தது. 

நேற்று சென்னை அணியின் கேதார் ஜாதவ், ஐ.பி.எல்-ல் இருந்து விலகியிருந்தார். அவரை ரூ.7.8 கோடி கொடுத்து சி.எஸ்.கே நிர்வாகம் வாங்கியது. அவருடைய அடிப்படை விலை ரூ.2 கோடி. இவர்கள் உட்பட, ஐ.பி.எல் தொடரில் இருந்து காயம் காரணமாக, மிட்செல் சான்ட்னர் (சிஎஸ்கே), மிட்செல் ஜான்சன் (கொல்கத்தா), காகிஸோ ரபாடா (டெல்லி), நாதன் கோல்ட்டர் நில் (பெங்களூரு), மிட்செல் ஸ்டார்க் (கொல்கத்தா) ஆகிய 8 பேர் வெளியேறியுள்ளனர்.

சிஎஸ்கே வீரர் பாப் டு பிளேஸிஸ், ராஜஸ்தானின் ஜோஃப்ரா அர்ச்சர் ஆகியோருக்கு காயத்தின் தாக்கம் இருப்பதால், துவக்க போட்டிகளில் பங்கேற்கவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close