ஐ.பி.எல்: போராட்டத்துக்கு நடுவே சி.எஸ்.கே - கொல்கத்தா இன்று மோதல்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2018 03:58 pm


ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி பெற்றது. இதனால் ஹோம் கிரவுண்டில் வெற்றியை பதிவு செய்ய சென்னை அணி மிகுந்த முனைப்புடன் காத்திருக்கிறது. இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னையில் நடைபெறும் முதல் ஐ.பி.எல் போட்டி இது என்பதாலும், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும்.  

சென்னை அணியின் முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கேதார் ஜாதவ், காயம் காரணமாக ஐ.பி.எல்-ல் இருந்து விலகினார். இதனால் அவருக்கு பதில் ஷர்துல் தாகூர் களமிறக்கப்படலாம். 


கொல்கத்தா அணியும், தனது முதல் ஆட்டத்தில் பெங்களூருவை சாய்த்தது. இதனால் இந்த அணியும் இரண்டாவது வெற்றிக்கு போட்டிபோடும். 

இரு அணிகளும் இரண்டு முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்று முத்திரை படைத்துள்ளது. எனவே சமன்பாலத்துடன் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

ஐ.பி.எல் போட்டியில் இதுவரை இவ்விரு அணிகளும் 16 முறை மோதியுள்ளன. இதில், 10 முறை சென்னை அணியும், 6 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளன. 

சி.எஸ்.கே போட்டியை காண சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. போட்டிக்கான டிக்கெட்கள் ஏற்கனவே  விற்று தீர்ந்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டமும் வலுத்து வருகிறது. சென்னையில் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சில அமைப்புகள் போர்கொடி தூக்கியுள்ளதால், சேப்பாக்கத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போராட்டத்துக்கு நடுவே சி.எஸ்.கே அணி பங்கேற்கும் இப்போட்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, மிட்செல் ஜான்சன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஷுப்மான் கில், இஷாங்க் ஜக்கி, கம்லேஷ் நாகர்கோட்டி, நிதிஷ் ராணா, வினய் குமார், அபூர்வ் வான்கடே, ரிங்கு சிங், சிவம் மாவி, கேமரூன் டெல்போர்ட், ஜெவோன் சீர்லெஸ், டாம் குரான். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close