காமன்வெல்த் போட்டி: பாரா-பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2018 06:37 pm


காமன்வெல்த் போட்டியில் ஊனமுற்றவர்களுக்கான பிரிவில் இருந்து இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில், இந்திய பாரா-பளுதூக்கும் வீரர் சச்சின் சவுத்ரி, ஆண்களுக்கான ஹெவிவெய்ட் இறுதிச் சுற்று போட்டியில், வெண்கலப்பதக்கம் வென்றார். மூன்று இந்திய பாரா-வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், சச்சின் சவுத்ரி 181 புள்ளிகள் பெற்று பதக்கம் பெற்றார். நைஜீரியாவின் அப்துலாஜீஸ் இப்ராஹிம் தங்கம் மற்றும் மலேசியாவின் யீ கஹீ ஜோங் வெள்ளி பதக்கமும் வென்றனர். 

சச்சின் சவுத்ரி, கடந்த ஆண்டு துபாயில் நடந்த உலக கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். 2012ம் ஆண்டு கோடைகால பாராலிம்பிக் போட்டியிலும் சச்சின் பங்கேற்று, 9-வது இடத்தை பிடித்தார். 

மற்ற இந்திய பாரா-வீரர்களான ஃபர்மான் பாஷ், அசோக் குமார் ஆகியோர் லைட்வெயிட் பிரிவுக்கான இறுதிச் சுற்றில், 5-வது, மற்றும் 11-வது இடத்தை பிடித்தனர். பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா காடன், லைட்வெயிட் பிரிவில் 5-வது இடத்தை பிடித்தார்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு தற்போது வரை மொத்தமாக 21 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close