இந்தியாவில் இருந்து ஆசிய கோப்பை போட்டியின் இடம் மாற்றம்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2018 07:05 pm


ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

2018ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி வரும் செப்டம்பர் 13ம் தேதி முதல் 28ந் தேதி வரை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில் பிரச்னை உள்ளதால், இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், நேபாளம், சிங்கப்பூர், மலேசியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு இடையில் போட்டி நடத்தப்படும். இதில் வெல்லும் அணி ஆறாவது அணியாக ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும்.

இந்த ஆண்டு நடக்கும் போட்டி 14-வது ஆசிய கோப்பை போட்டியாகும். 2016ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி இருந்தது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close