காமன்வெல்த்: டபிள்-ட்ராபில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2018 01:46 pm


காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான டபிள்-ட்ராப் பிரிவில் இந்தியாவின் அன்குர் மிட்டல் வெண்கலப் பதக்கம் வென்றார். 

கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடு வீரர் அன்குர் மிட்டல், டபிள்-ட்ராப் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் பெற்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க பட்டியலில், 24 பதக்கங்களாக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மெக்மேத் தங்கமும், இங்கிலாந்தின் மெக்நேலே வெள்ளியும் வென்றனர். 

ஹரியானாவை சேர்ந்த அன்குர் இதற்கு முன், டெல்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் போட்டியில் வெள்ளி, மெக்சிகோவில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பையில் தங்கம், கஜகஸ்தானில் நடந்த 7-வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக ஷாட்கன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, மற்றும் பிரிஸ்பேனில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.

முன்னதாக இன்று பெண்களுக்கான டபிள்-ட்ராப் பிரிவில் ஷ்ரேயாஸி சிங் தங்கப் பதக்கம் வென்று அசத்திருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close