கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்பந்தம்: ஸ்டீவ், வார்னர் நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2018 03:11 pm


கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் கைவிடப்பட்டுள்ளனர். 

2018-19 சீசனுக்கான ஒப்பந்த பட்டியலை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டது. அதில், தடை பெற்ற முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், துவக்க வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோரது பெயர்கள் இடம் பெறவில்லை. 

20 பேர் கொண்ட அந்த பட்டியலில், கடந்த ஆண்டு இடம் பிடிக்காத டிம் பைன் இணைக்கப்பட்டுள்ளார். மேலும், ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜ்ஹயே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், அன்ரியு டியே ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த ஓராண்டுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா குறுகிய ஓவர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த உள்ளது. 

விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரே, இந்த வருடம் தான் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியிருந்த நிலையில், அவருக்கு முதல்முறையாக சென்ட்ரல் கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்திய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனால், ஸ்மித், வார்னருக்கு ஓராண்டும், பான்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதங்களுக்கும் தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இந்த மூவரும் இந்த தடையை ஏற்றுக் கொள்வதாகவும், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை எனவும் அறிவித்தனர். இதனால் இவர்களது பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்த சீசனில் ஆஸ்திரேலியா அதிகமான குறுகிய ஓவர் போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது. அதில் ஒன்றாக இங்கிலாந்தில் ஜூலை, ஜூலை மாதம் நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டியும் அடங்கும். இதனால் உலக கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா செயல்பட இருப்பதாக தேர்வுக்குழு தலைவர் ட்ரெவர் ஹோஹ்ன்ஸ் தெரிவித்தார். 

ஸ்மித் இல்லாததால், பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் அல்லது விக்கெட் கீப்பர் டிம் பைன் கேப்டன்ஷிப் பொறுப்புகளை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் நாதன் கோல்ட்டர் நில் ஒப்பந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. மேலும், ஆஸ்திரேலியா கடந்த ஆறு மாதங்களில் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாக்சன் பர்ட் மற்றும் சாட் சேயர்ஸ் இடம் பெற்றதால், ஒப்பந்த பட்டியலில் இவர்களது பெயர் சேர்க்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவின் ஒப்பந்த வீரர்களின் பட்டியல்: அஷ்டன் அகர், அலெக்ஸ் காரே, பேட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், பீட்டர் ஹன்ட்ஸ்கோம், ஜோஷ் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நாதன் லியொன், க்ளென் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், டிம் பைன், மாட் ரென்ஷா, ஜ்ஹயே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அன்ரியு டியே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close