காமன்வெல்த்: இந்திய துப்பாக்கி சுடு வீராங்கனை தேஜஸ்வினி வெள்ளி வென்றார்

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2018 01:16 pm


காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான 50மீ ரைஃபிள் ப்ரோன் பிரிவில் இந்திய துப்பாக்கி சுடு வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த் (618.9 புள்ளி) வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க பட்டியலை 25 ஆக உயர்த்தியுள்ளார்.

சிங்கப்பூரின் மார்டினா லிண்ட்சே வேலோஸோ (621 புள்ளி) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஸ்காட்லாந்தின் சேயோனைட் (618.1 புள்ளி) வெண்கலம் வென்றார். போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான அஞ்சும் மௌடகில் 602.2 புள்ளிகளுடன் 16-வது இடத்தை பிடித்தார். 

37 வயதான சாவந்துக்கு, இது ஆறாவது பதக்கமாகும். 2006ல் இரண்டு தங்கம், 2010ல் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார். அர்ஜுனன் விருது பெற்றிருக்கும் சாவந்த், 2010ல் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் இவரது திறமை ஜொலிக்காதது துரதிஷ்டமே. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close