காமன்வெல்த் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 13-வது தங்கம்

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2018 01:55 pm


காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு 13-வது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார் ராகுல் அவரே. 

21-வது காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியின் ப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ராகுல் அவரே, கனடாவின் ஸ்டீவன் தகஹாஷியை 15-7 என வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை பபிதா குமாரி, ப்ரீஸ்டைல் 53 கிலோ எடைப் பிரிவில், கனடாவின் டயானா டிஎக்கெரிடம் 2-5 என தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை கிரண், ப்ரீஸ்டைல் 76 கிலோ எடைப் பிரிவில், வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

பதக்கப்பட்டியலில் இந்தியா 13 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலத்துடன் மொத்தம் 28 பதக்கங்களை பெற்றுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close