காமன்வெல்த் போட்டி: விதிமுறையை மீறிய 2 இந்திய வீரர்கள் வெளியேற்றம்

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2018 09:44 am


காமன்வெல்த் போட்டியில் இருந்து இரண்டு இந்திய வீரர்கள் விதிமுறையை மீறியதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

21-வது காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் தினமும் கடுமையாக போட்டிபோட்டு வரும் நிலையில், இரண்டு தடகள வீரர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ரேஸ் வாக்கர் கே.டி இர்பான் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் வீரர் ராகேஷ் பாபு விதிமுறைகளை மீறியதால், அடுத்த விமானத்திலேயே நாடு திருப்பப்பட்டுள்ளனர். 

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஊசியை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இவர்கள் ஊசியை பயன்படுதியாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 


ஆஸ்திரேலியா விளையாட்டு ஊக்கமருந்து தடுப்பு ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, ராகேஷின் பையில் இருந்தும், இர்பான் இருந்த ரூமின் மேஜையிலும் ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. 

ஆனால் இருவருமே அந்த ஊசி எவ்வாறு அங்கு வந்தது என்று தெரியாது என்று கூறியுள்ளனர். ராகேஷ், தன்னுடைய பைக்கு தான் பொறுப்பு என்றாலும் கூட ஊசி அதில் எப்படி வந்தது என்று தனக்கு தெரியாது என்றார். இர்பான் தன்னுடைய போட்டியை நிறைவு செய்துவிட்ட நிலையில், ராகேஷ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

 காமன்வெல்த் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய வீரர் ஒருவரின் அறையில் ஊசி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்திய வீரர்கள் பிரச்னை ஏற்பட்டது. ஆனால் பின்னர் மருத்துவர் அதனை அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக போட்டது தெரியவந்ததை அடுத்து, தண்டனையில் இருந்து வீரர்கள் தப்பித்திருந்த நிலையில், மீண்டும் ஊசி சர்ச்சையில் இந்திய வீரர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close