காமன்வெலத் போட்டி மல்யுத்தத்தில் இந்திய வீரர் பஜ்ரங் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இன்று நடந்த ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த இறுதி போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியாவின் பஜ்ரங் 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வேல்ஸ் நாட்டின் கேன் சாரிக்கை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்தியாவிற்கு 17வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
மேலும் 57 கிலோ எடைப் பிரிவு பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா தண்டா வெள்ளி பதக்கம் வென்று அசத்தினர்.
இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 17 தங்கம், 8 வெள்ளி மற்றும் 11 வெண்கலத்துடன் 36ஆக உயர்ந்துள்ளது.