காமன்வெல்த்: இந்தியாவுக்கு 21-வது தங்கம்

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2018 12:00 pm


ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 21-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். 86.47மீ தூரம் ஈட்டியை அவர் எறிந்தார். இந்த சீசனில் சிறந்த ஈட்டி எறிதல் போட்டியாக இது அமைந்தது. மேலும், அறிமுக காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்கள் பட்டியலில் நீரஜ் இணைந்தார். தவிர காமன்வெல்த் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் வெற்றி கண்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சோப்ரா படைத்துள்ளார். 

ஆஸ்திரேலியாவின் கமீஸ் பிகாக் வெள்ளி, கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர் வெண்கலப் பதக்கம் வென்றனர். மற்றொரு இந்திய வீரரான விபின் கஷானா ஐந்தாவது இடம் பிடித்தார்.

இந்தியா 21 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடர்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close