காமன்வெல்த் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா- சிந்து மோதல்

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2018 12:27 pm


21-வது காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிச் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால்- பி.வி. சிந்து மோத உள்ளனர். 

காமன்வெல்த் போட்டியில் இன்று பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் உலக தரவரிசையில் 3ம் இடம் வகிக்கும் பி.வி. சிந்து 21-18, 21-8 என்ற நேர்செட்களில் கனடாவின் மிச்செல்லேவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் 12ம் இடத்தில் இருக்கும் சாய்னா 21-14, 18-21, 21-17 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கிளாமரை தோற்கடித்தார். இதனால் இந்தியாவுக்கு மற்றொரு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. 

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, இங்கிலாந்தின் ராஜீவை 21-10, 21-17 என தோற்கடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளார். இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் லீ சோங்கை, ஸ்ரீகாந்த் எதிர்கொள்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close