காமன்வெல்த் மல்யுத்தம்: சுமித், வினேஷ் தங்கம் வென்றனர்; சாக்ஷிக்கு வெண்கலம்

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2018 01:32 pm


21-வது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தோம் 23 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் 125 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுமித் மாலிக் தங்கப்பதக்கம் வென்றார். பாகிஸ்தான் வீரர் தயப் ராசாவை 10-4 என சுமித் வீழ்த்தினார். 

பெண்களுக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் வினேஷ் போகாட், கனடாவின் ஜெஸ்ஸிகா மெக்டொனால்டை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

மற்றொரு போட்டியில் 62 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் சாக்ஷி மாலிக், இறுதிப் போட்டியில் நைஜீரியா வீராங்கனை அமிநாத் அடேனியிடம் தோல்வி கண்டு, வெள்ளி பதக்கம் பெற்றார். 

இந்தியா 23 தங்கம், 13 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 51 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close