விராத் கோலி கிரிக்கெட்டின் ரொனால்டோ: பிராவோ

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2018 09:52 am

இந்திய கேப்டன் விராத் கோலி கிரிக்கெட்டின் ரொனால்டோ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ புகழ்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணையின் நம்பிக்கை நட்சத்திரம் பிராவோ நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, விராத் கோலி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய போது எனது தம்பியும் விளையாடினார். அப்போதெல்லாம் என் தம்பியிடம் விராத் கோலியை பார்த்து அவர் விளையாடும் விதத்தை பார்த்துக் கற்றுக்கொள்ள சொல்வேன். ஒரு முறை நானே விராத் கோலியிடம் சென்று என் தம்பியுடன் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவது குறித்து பேச சொன்னேன்.

விராத் கோலியை பார்க்கும் போது, அவர் எனக்கு கிரிக்கெட்டின் ரொனால்டோ போல தெரிகிறார். ஒரு கிரிக்கெட் வீரராக விராத் கோலியை எதிர்த்து விளையாடும் போது அவரது கிரிக்கெட் மீதான ஆர்வத்தை பார்த்து ரசித்திருக்கிறேன். தற்போது அவர் செய்திருக்கும் சாதனைகளுக்கெல்லாம் அவர் தகுதியானவர் தான் என்று தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close