மே 19ல் இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்தல்

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2018 01:55 pm


இலங்கையின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற மே மாதம் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 27ம் தேதியோடு முடிவடைகிறது என்று இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் ரோஷன் பியன்வாலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய அலுவலக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக, மே 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது இலங்கை வாரியத்தின் தலைவராக இருக்கும் திலங்கா சுமதிபால, தேர்தலில் தனது அணியுடன் போட்டியிட உள்ளார். மோகன் டி சில்வா மற்றும் கே. மதிவாணன் (துணை தலைவர்கள்), பியன்வாலா (செயலாளர்), ஷமி சில்வா (பொருளாளர்) ஆகியோர் போட்டியில் இடம் பெறுவர். இத்தேர்தல் இரண்டு வருட காலத்திற்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

1998ல் திலங்கா சுமதிபால முதல்முறையாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவரானார். கிரிக்கெட் தேர்தலில் அவருக்கு வலிமையான ஆதரவு எப்போதும் இருக்கும். சுமதிபாலவை எதிர்த்து போட்டியிடுபவர் யார் என்று தெரியவில்லை. என்றாலும் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close