இங்கிலாந்து கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக எட்வர்ட் ஸ்மித் நியமிப்பு

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2018 06:07 pm


முன்னாள் இங்கிலாந்து வீரர் எட்வர்ட் ஸ்மித், தேசிய ஆண்கள் அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று ஆண்கள் அணிக்கான தேர்வுக்குழு தலைவராக ஸ்மித்தை நியமித்தது. இங்கிலாந்து அணிக்காக 2003ல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித், கென்ட் மற்றும் மீட்டில்செக்ஸ் அணிக்காக கவுன்ட்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். 

41 வயதான ஸ்மித், அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் களமிறங்க போகும் இங்கிலாந்து அணியை தேர்வு செய்ய வேண்டும். இதுவே அவர் பதவி ஏற்றவுடன் செய்ய இருக்கும் முதல் பணியாகும்.

இப்பதவி குறித்து ஸ்மித் கூறுகையில், "தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு இது அற்புதமான நேரம். தலைமை பயிற்சியாளர் ட்ரெவர், டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட, குறுகிய ஓவர் கேப்டன் இயான் மோர்கன் ஆகியோருடன் பணி புரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close